செய்திகள் :

சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - என்ன நடந்தது?!

post image

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குட்டையை தூர்வாரும் பணியை துவக்கி வைக்க சூலூர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் வருகை தந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர் உடன் வந்த த.வெ.க கட்சிக்காரர்கள் முன்னிலையில் குட்டையை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

இதனால் பொதுமக்களுக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், எம்.எல்.ஏ-வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சிலர் சட்டமன்ற உறுப்பினரை நோக்கி கல் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த போலீஸார் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து குட்டை தூர்வாரும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டதால், அதனை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்தக் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விட வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர் அங்கேயே அமர்ந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “70 ஏக்கர் பரப்பிலான இந்தக் குட்டை பகுதி மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது. குட்டையில் மழை காலங்களில் தேங்கும் நீரை வைத்து விவசாயம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் தற்போது கழிவுநீரை கொண்டு வந்துவிட்டால், அதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நிலத்தடி நீரின் தன்மை மாறக்கூடும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குட்டையில் நிரப்பக் கூடாது” என தெரிவித்தனர்.

எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்... "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும் தெரிகின்றன.இதுவரை பேச்சுவார்த்தைக் குறித்தோ, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் குறித்தோ ஈரான் வாயைத் திறந்ததே இல... மேலும் பார்க்க

`அசிங்கமா ஆபாசமா பேசுறாங்க... ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?'- மதுராந்தகத்தில் காட்டமான விஜய்

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டிருக்கிறா... மேலும் பார்க்க

``வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" - கீர்த்தனா

லண்டன் பயணம் போகாதது, அறுவை சிகிச்சைக்காக அளித்த மருத்துவ அறிக்கையில் குளறுபடி என, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருக்கிறார், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. இடைத்தேர்தலுக்காக தாராபுரத்தில் பிரச... மேலும் பார்க்க

கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!

ஐ.நா என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்று தெரியாத ஒருவருக்குக்கூட, ‘இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடந்தாலோ, போர் நடந்தாலோ, ஐ.நா தான் சமாதானம் பேசும்’ என்பது தெரியும்.ஐ.நா என்றா... மேலும் பார்க்க

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' - வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்

திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க