செய்திகள் :

"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" - டிடிவி தினகரன்

post image

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்

இப்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து இன்னும் சில முக்கிய விஜபிக்கள் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் டிடிவி தினகரன், "செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர். அதிமுகவின் விசுவாசியாக இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நம்பிக்கையாக நின்றவர்.

செங்கோட்டையன் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு செய்த துரோகத்தால் வந்த விளைவு. அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர். ஆனால், ரொம்ப அழுத்தமானவர்.

செங்கோட்டையன் - பழனிசாமி விவகாரம் குறித்து பேசும் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இப்போது கட்சி மாறியிருக்கிறார் என்றால் எவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பார். பழனிசாமியின் துரோகத்திற்கு நிச்சயம் பாடம் புகட்டுவார் செங்கோட்டையன்.

தவெகவிற்குச் சென்றபிறகும் அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தது அண்ணன் செங்கோட்டையனின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அது அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது. எங்களுக்கு எல்லாம் அது பெருமையாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க