மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
சென்னையில் 55 விமானங்கள் ரத்து
புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரவு 7.30 மணி வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்
புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கிறது. இதனால் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.