செய்திகள் :

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

post image

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார்.

ரயில் நிலைய கோச் ரெஸ்டாரன்ட் எதிரே குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜூலை 2 அதிகாலை 3.00 மணியளவில் அங்கு வந்த பொன்னேரியைச் சேர்ந்த சசிகுமார் (42) என்பவர், தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் திடீரென தன் தோளில் தூக்கிச் சென்றுள்ளார்.

குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற சசிகுமார் மற்றும் அச்சிறுமி இருவரும் வெவ்வேறு மொழிகளில் (தமிழ் மற்றும் இந்தி) பேசியதை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் கவனித்தார்.

கடத்தல்

சந்தேகமடைந்த அவர், உடனடியாகச் செயல்பட்டு சசிகுமாரை மடக்கிப் பிடித்து, ரோந்துப் பணியில் இருந்த எலிபெண்ட் கேட் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் மற்றும் இரவு ரோந்து ஆய்வாளர் தேவி ஆகியோர் சசிகுமாரைக் கைது செய்து, சிறுமியைப் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சசிகுமார் கடந்த 3 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்வது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநர் முருகனின் இந்தத் துரிதமான செயலைப் பாராட்டி, கூடுதல் டி.ஜி.பி. அன்பு, ஐ.ஜி. பவானீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அவருக்குப் பாராட்டுத் சான்றிதழும் வெகுமதியும் வழங்கினார்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க