செய்திகள் :

'சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்!- விவரம் என்ன?

post image

தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில்தான் அதிமுகவினர் தவெகவில் இணைந்து வந்தனர். அப்படியிருக்க தவெகவில் இணைந்த அதிமுகவினரை சந்திக்க முதல்வர் விஜய் இன்று நேரம் கொடுத்திருக்கிறார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பலரும் தவெகவில் இணைந்துவிட்டனர். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டும் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா போன்றோரும் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

இவர்கள் போக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரைக்கும் பலகட்ட நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இன்றும் வைகைச் செல்வன், கடலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசீலன் உட்பட பலரும் தவெகவில் இணையவிருக்கின்றனர்.

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

இதுவரையில் இப்படி மாற்றுக்கட்சியினர் இணையும் விழா எதிலும் முதல்வர் விஜய் கலந்து கொண்டதில்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா தலைமையிலேயே இணைப்பு விழாக்கள் நடைபெறும். அப்படி தவெகவில் இணைந்த பலரும் முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டுமென அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

முதல்வரின் காதுக்கும் மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களின் கோரிக்கை சென்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று அவர்களை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கொடுத்திருக்கிறார். இன்று மதியம் 2 மணிக்கு மேல் பனையூர் அலுவலகம் வரும் முதல்வர் விஜய், விஜயபாஸ்கர்கள் தொடங்கி தவெகவிலிருந்து அதிமுகவில் இணைந்த பலரையும் சந்திக்கிறார்.

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்..." - அமைச்சர் பிரபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர் நில ஒதுக்கீடு இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனத்திற்கு (IREL) அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி காலாவதியா... மேலும் பார்க்க

"மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்..." - ஆளுநர் அர்லேகர் பேச்சு

"பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்" என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ... மேலும் பார்க்க

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள... மேலும் பார்க்க

''எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல'' - கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ள... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; என்ன நடந்தது?

கடந்த ஜூன் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.... மேலும் பார்க்க

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்; தண்டனை குறைப்பு செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சின்வாரா நீதிமன்றம் சிவாவிற்கு ஆயுள் தண்டனை ... மேலும் பார்க்க