செய்திகள் :

"மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்..." - ஆளுநர் அர்லேகர் பேச்சு

post image

"பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்" என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார்.

கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சரிடம் கூறுவேன்.

ஆளுநர் அர்லேகர் - விஜய்
ஆளுநர் அர்லேகர் - விஜய்

ஆளுநரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்னை'' என்று கூறியிருக்கிறார்.

ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றைப் பற்றி பேசியதும், ஆலோசனைக் கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"காவிரிக்காக ஜெயிலுக்குப் போக நான் தயார்" - மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்ப... மேலும் பார்க்க

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்..." - அமைச்சர் பிரபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர் நில ஒதுக்கீடு இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனத்திற்கு (IREL) அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி காலாவதியா... மேலும் பார்க்க

'சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்!- விவரம் என்ன?

தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில்தான் அதிமுகவினர் தவெகவில் இணைந்து வந்தனர். அப்படியிருக்க தவெகவில் இணைந்த அதிம... மேலும் பார்க்க

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள... மேலும் பார்க்க

''எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல'' - கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ள... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; என்ன நடந்தது?

கடந்த ஜூன் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.... மேலும் பார்க்க