செய்திகள் :

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தூய்மைப் பணியாளர் சடலம்; பரிசோதனையில் அம்பலமான கொலை!

post image

சென்னை திருவேற்காடு அன்னலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹோமாவதி (55). இவர், வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் ஹோமாவதி வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஹோமாவதி வேலைக்குச் செல்லவில்லை. மேலும் அவரின் வீடும் பூட்டியே இருந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், திருவேற்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஹேமாவதியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடனே, சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை
கொலை

தொடர்ந்து வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் தூய்மைப் பணியாளர் ஹேமாவதி, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் அவரை யார் கொலை செய்தது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதில் ஓர் இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது நகைக்காக ஹோமாவதியைக் கொலைசெய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. நகைகளோடு தன்னுடைய நண்பன் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸிடம் சிக்கிய இளைஞர் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நகைகளோடு தப்பிய இளைஞரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூரில், கடந்த 10-ம் தேதி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம்(45) தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(45), முருகன்(48) ஆகிய இருவரும் தடைசெ... மேலும் பார்க்க

சென்னை: வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளை நூதன முறையில் திருடிய உதவி மேலாளர் - சிக்கியது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மே... மேலும் பார்க்க

சட்டையைப் பிடித்து அறைந்த ஆசிரியை; சுருண்டு விழுந்து இறந்த சிறுவன் - ஆந்திரா பள்ளியில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உ... மேலும் பார்க்க

`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்' - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார். கணவ... மேலும் பார்க்க

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க