செய்திகள் :

சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

post image

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் மாணவியின் புகாரை விசாரிக்கும்படி மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாலியல் குற்றச்சாட்டு மாதிரிப் படம்
பாலியல் குற்றச்சாட்டு மாதிரிப் படம்

புகாரளித்த மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர், பேராசிரியர் ஞானவேல் பாபு, கொடுத்த பாலியல் டார்ச்சர் தொடர்பான ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு மாணவி கொடுத்த ஆதாரங்களை போலீஸார் ஆய்வுக்குட்படுத்தினர். அதோடு குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஞானவேல் பாபுவிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர் .

இதற்கிடையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில் பாலியல் புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பேராசிரியர் ஞானவேல் பாபுவை நெல்லையில் வைத்து கைதுசெய்திருக்கிறது சென்னை காவல்துறை.

`எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன!' - திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ``விசிக போட்டியிடு... மேலும் பார்க்க

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்...' - பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்த நிலையில், இப்போது 30 ஆம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி வேண... மேலும் பார்க்க

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது. ஆனால், இம்முறை தோனி ஓர் 'இம்பேக்ட் பிளேயராக'... மேலும் பார்க்க

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது...', 'சிறப்பான பேச்சுவார்த்தை இது'; 'அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்த... மேலும் பார்க்க

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' - கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தள... மேலும் பார்க்க

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! - நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளி... மேலும் பார்க்க