செய்திகள் :

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்...' - பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

post image

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்த நிலையில், இப்போது 30 ஆம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

TVK Vijay - விஜய்
TVK Vijay - விஜய்

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 28) தனது பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தார். பெரம்பூரில் தொடங்கி கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் என 5 தொகுதிகளில் மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் நின்று விஜய் பிரசாரம் செய்யுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக முறைப்படி தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் கோரப்பட்டிருந்தது. விஜய் பெரம்பூரில் பரப்புரை செய்யவிருந்த MKB நகர் சந்திப்பில் தவெக கோரிய அளவுக்கு 3000 பேர் கூட முடியாது எனக் கூறி காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் விஜய்யின் பிரசாரத்திற்கான அனுமதியை மறுத்தார். விஜய்யின் முதல் பிரசாரத்துக்கே அனுமதி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

TVK Vijay
TVK Vijay

இதனைத் தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரின் விவேகானந்தர் 2 வது தெருவில் விஜய் கலந்துகொள்ளும் தெருமுனை பிரசாரக் கூட்டத்தை நடத்த தவெக நிர்வாகிகள் தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். மனுவின் ஹைலைட்டாக கூட்டத்தில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதேமாதிரி, 30 ஆம் தேதி சென்னையின் வேறு சில தொகுதிகளிலும் கூட்டம் நடத்த தவெகவினர் தயாராகி வருகின்றனர்.

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' - விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.TVK Vijayகாவல்துறை அனுமதி வழங்காததால் அதை காரணம் ... மேலும் பார்க்க

`எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன!' - திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ``விசிக போட்டியிடு... மேலும் பார்க்க

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது. ஆனால், இம்முறை தோனி ஓர் 'இம்பேக்ட் பிளேயராக'... மேலும் பார்க்க

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது...', 'சிறப்பான பேச்சுவார்த்தை இது'; 'அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்த... மேலும் பார்க்க

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' - கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தள... மேலும் பார்க்க

சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும்... மேலும் பார்க்க