செய்திகள் :

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' - விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

post image

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

TVK Vijay
TVK Vijay

காவல்துறை அனுமதி வழங்காததால் அதை காரணம் காட்டி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருந்தார். இதைக் கண்டித்து விஜய்யும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் அதிகாரி தரப்பிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

விஜய்யின் அனுமதி கடிதத்திற்கு காவல்துறை வழங்கியிருக்கும் பதிலில், 'மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ் எம் நகர் 82 ஆவது பிளாக் சந்திப்பு என குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay
TVK Vijay

மனுதாரர் மனுவில் மேற்படி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் தங்களது பிரசாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' எனக் கூறப்படுகிறது. இதை காரணம் காட்டிதான் தேர்தல் அலுவலர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

`விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது' - ஜோதிமணி ஆதங்கம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்... மேலும் பார்க்க

`எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன!' - திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ``விசிக போட்டியிடு... மேலும் பார்க்க

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்...' - பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்த நிலையில், இப்போது 30 ஆம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி வேண... மேலும் பார்க்க

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது. ஆனால், இம்முறை தோனி ஓர் 'இம்பேக்ட் பிளேயராக'... மேலும் பார்க்க

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது...', 'சிறப்பான பேச்சுவார்த்தை இது'; 'அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்த... மேலும் பார்க்க

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' - கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தள... மேலும் பார்க்க