செய்திகள் :

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 24 வயதுடைய பெண்ணிடம் பழகி வந்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரஞ்சித்குமார் லவ் டார்ச்சர் செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண், `நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலிக்கிறேன். அதனால் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்' என ரஞ்சித்குமாரிடம் பல தடவை கூறியிருக்கிறார். ஆனால் ரஞ்சித்குமார் மனமாறாமல் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.

கைது
கைது

இதனால் அப்பெண் வேலையிலிருந்து நின்றுவிட்டார். அதன் பிறகும் ரஞ்சித்குமார் அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் போட்டோவை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து மார்பிங் செய்த ரஞ்சித்குமார், அதை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் காதலனிடமும் போட்டோ குறித்துப் பேசிய ரஞ்சித்குமார், அவரையும் மிரட்டியிருக்கிறார். ரஞ்சித்குமாரின் இத்தகைய டார்ச்சரால் மனமுடைந்த அப்பெண், ரஞ்சித்குமார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரஞ்சித்குமாமரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆதாரங்கள் அடிப்படையில் ரஞ்சித்குமாரைக் கைதுசெய்த போலீஸார், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சித்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க