செய்திகள் :

`செளமியா அன்புமணி-ஐ தோற்கடிக்க வேண்டும்; துரோக கும்பலுக்கு..!' - ராமதாஸ் காட்டம்

post image

பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.

`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் கூறிவந்த அன்புமணி, வருகிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அவருக்கே மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க-வுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார்.

இந்நிலையில், பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், “தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்திற்காக அணி மாறி, கொள்கையற்ற துரோக கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்பது உண்மை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரத்தைப் பணமாக்கவே நினைக்கிறார்கள்.

மக்களின் குறைகளை நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ எதிரொலிக்க வேண்டும் என்பதே நான் அளித்த பயிற்சி.

ஆனால், அன்புமணி இந்தியாவிலேயே மிகக் குறைந்த நாள்களே நாடாளுமன்ற அவைக்குச் சென்றவர்.

அன்புமணி - சௌமியா
அன்புமணி - சௌமியா

நேரடி மக்கள் களத்தைக் காண அஞ்சி, சட்டமன்றத் தேர்தல்களில் தனது மனைவியை நிறுத்திவிட்டு, இவர் பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரத்தைத் தேடுகிறார்.

அரசியல் ரீதியாக மட்டுமன்றி, தனிப்பட்ட ரீதியிலும் அன்புமணி நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.

குறிப்பாக, அண்மையில் நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில், ஒரு வார்த்தைக்கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி.

இது அவரது குணாதிசயத்தையும், துரோக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. அன்புமணி தலைமையிலான இந்த கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதேபோல தர்மபுரியில் போட்டியிடும் சௌமியாவைத் தோற்கடிக்க வேண்டும். பணத்துக்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தேர்தலில் போட்டியிடுகிறார் செளமியா. அன்புமணி துரோக கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

``வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" - சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டின் உரிமைக்குரல் - சட்டமன்றத்தை நோக்கி அருண்ராஜ்

திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் அருண்ராஜுக்கு ஆதரவான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் களத்தில் இறங்கி விசாரிக்கையிலும், 'அருண்ராஜ... மேலும் பார்க்க

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.இளை... மேலும் பார்க்க