செய்திகள் :

சேத்துப்பட்டு: விடுதி வார்டன் போக்சோவில் கைது; மாணவனின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் 110 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவனும் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயில்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறைக்காக அந்த மாணவன் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். விடுமுறை முடிந்த பின்னரும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பெற்றோர் கேட்டும் மாணவன் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாலியல் புகார்

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவன் அழுதபடி இருந்துள்ளார். இதைக் கவனித்த அங்கிருந்த சிலர், மாணவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, விடுதி வார்டன் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் சைல்டு லைன் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மாணவன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சேத்துப்பட்டு போலீஸார் விடுதியில் வார்டனாகப் பணிபுரிந்து வந்த சந்தவாசல் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் (25) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜூலை மாதம் விடுதியில் 9-ம் வகுப்பு மாணவனுடன் இந்த 10-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டபோது, வார்டனிடம் சிக்கியுள்ளனர்.

கைது

இதையடுத்து, இரு மாணவர்களும் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வார்டன் இடையூறாக இருப்பதால், அவர்மீது பழிபோட்டபடி மாணவர்கள் இருவரும் குற்றம் சுமத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் விசாரணைக்கு முன்னதாகவே, மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வார்டன் இம்மானுவேல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுவிட்டார். இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளுடன் சேத்துப்பட்டு போலீஸார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’ - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டி.எஸ்.பி-யாக இருந்த ஜாபர் சித்திக், முன்னதாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் காவல் பணிக்கு நேரடியாகத் தேர்வானாவர். தஞ்சாவூர் மாவட்டம் திர... மேலும் பார்க்க

இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகளுக்கு பிரியாணியில் விஷம் வைத்த அப்பா

மும்பை வடாலாவில் வசிப்பவர் ஷெரீப் கான். கார்பெண்டரான ஷெரீப் மனைவி கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக இறந்து போனார். இதையடுத்து தனது மகள்கள் ரிஃபாத்(20), நுஜாத்(16) மற்றும் 10 வயது மகன் அகமது ஆகியோருடன் வ... மேலும் பார்க்க

தருமபுரி: மகளிர் சுய உதவிக் குழு பெயரில் ரூ 2.88 கோடி மோசடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாகப் பயன்படுத்தி 2.88 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மாணவிகள், ஆசிரியைகளின் படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை - பாலிடெக்னிக் மாணவர் மீது வழக்கு!

கேரள மாநிலம் புனலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து டெலிகிராம் குழுக்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்களுக்கு விற்... மேலும் பார்க்க

திருச்சி: சுடுகாட்டில் கிடந்த மனித எலும்புக்கூடு; பெட்ரோல் ஊற்றி எரிப்பா? - அதிர்ச்சி சம்பவம்!

​ திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வால்மால் பாளையம் அருகே உள்ள கீழூர் கிராம சுடுகாட்டில் மனித உடல் ஒன்று முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் காவல்துறையின... மேலும் பார்க்க

கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி... கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி சம்பவம்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது: 60). இவர், மேல விட்டு கட்டியில் உள்ள தனது அக்கா குடும்பத்தினர் உடன் வசித்து வந்தார். அங்கு தங்கி ஆடு, மாடுகளை வளர்... மேலும் பார்க்க