அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அ...
சேர்த்த பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடியலையா? செலவுகளுக்கு SWP பயன்படுத்துவது எப்படி?
வளைகுடா நாடுகளில் (Gulf Countries) வாழும் பெரும்பாலான NRI-களின் கதை இதுதான். ஊரை விட்டு ஓடியாடி உழைப்பது, சம்பாதிக்கும் தொகையைச் சேமிப்பது, அதை இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எனப் பல வருடங்கள் ஓடிவிடும்.
ஒருநாள் போர்ட்ஃபோலியோவைப் பார்த்தால், "அப்பாடா... நல்லதொரு தொகையை (Corpus) சேர்த்தாச்சு!" என்ற திருப்தி வரும். ஆனால், அடுத்த கணமே ஒரு மிகப்பெரிய குழப்பமும் வந்து நிற்கும்: "சரி... இந்தப் பணத்தை வச்சு என் தேவைகளை எப்படி நிறைவேத்திக்கிறது?"
சம்பளம் வரும்வரை பணப்புழக்கத்தைப் பற்றிப் பயமில்லை. ஆனால் வேலை குறையும்போதோ, இந்தியாவுக்குத் திரும்பும்போதோ அல்லது குடும்பச் செலவுகளுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்த நினைக்கும்போதோதான் பிரச்சனை தொடங்கும்.
தேவைப்படும்போது கண்டபடி பணத்தை எடுப்பது, பயந்துகொண்டே பணத்தை பேங்கில் போட்டு வைப்பது, அல்லது 'என்ன ஆகுமோ' என்ற பயத்திலேயே செலவே செய்யாமல் இருப்பது... இதெல்லாம் உங்கள் உழைப்புக்குச் செய்யும் நன்மையல்ல!
இங்குதான் SWP (Systematic Withdrawal Plan) உங்கள் பணப்புழக்கத்தை சீராக்கும் கருவியாக மாறுகிறது.

'டாப்' திறந்தாச்சு... தண்ணி எவ்வளவு வேணும்?
மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் SWP என்பது, நீங்கள் விரும்பும் தொகையை குறிப்பிட்ட இடைவெளியில் (மாதம்/ஆண்டு) உங்கள் வங்கி கணக்கிற்குத் தானாகவே வரவழைக்கும் ஒரு வசதி. தேவையான யூனிட்கள் மட்டும் விற்கப்பட்டு, மீதித் தொகை தொடர்ந்து முதலீட்டிலேயே வளர்ந்துகொண்டிருக்கும்.
சிம்பிளா சொல்லணும்னா...உங்கள் முதலீட்டுத் தொகை ஒரு 'வாட்டர் டேங்க்' (Reservoir).SWP என்பது அதில் பொருத்தப்பட்ட 'டாப்' (Tap).
டேங்கில் இருக்கும் முழுத் தண்ணீரையும் ஒரே அடியாகத் திறப்பது புத்திசாலித்தனமல்ல. எவ்வளவு தண்ணீர் வேணும், எவ்வளவு அடிக்கடி வேணும், டேங்கில் எப்போதும் எவ்வளவு இருப்பு இருக்கணும் எனத் திட்டமிடுவதே 'ஸ்மார்ட்' SWP

ஒரே ஒரு கார்பஸ்... பல தேவைகள்!
உதாரணத்திற்கு ஒரு Gulf NRI-யிடம் ₹1 கோடி முதலீடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரே ஃபண்டாகப் பார்க்காமல், தேவைகளுக்கேற்ப பிரித்து SWP அமைக்கலாம்:
மாதாந்திர குடும்பச் செலவு: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரலாம்.
வருடாந்திர இன்சூரன்ஸ் / பராமரிப்பு: ஆண்டுக்கு ஒருமுறை தேவைப்படும் பெரிய செலவுகளுக்கு ஏற்றவாறு திட்டமிடலாம்.
பிள்ளைகளின் காலேஜ் ஃபீஸ்: ஃபீஸ் கட்ட வேண்டிய நேரத்தில் மட்டும் தானாகப் பணம் கைக்கு வர வழிசெய்யலாம்.
இந்தியாவுக்கு ரிட்டர்ன் ஆவது: ஊருக்குத் திரும்புவதற்கு முன்பே, எதிர்கால இந்தியச் செலவுகளுக்கு ஏற்ப SWP சிஸ்டத்தை செட் செய்துவிடலாம்.
₹1 கோடி... ₹50,000 செலவு... ஒரு குட்டி கணக்கு!
உங்கள் ₹1 கோடி முதலீட்டில் இருந்து மாதம் ₹50,000 SWP எடுக்கிறீர்கள் என வைப்போம். அதாவது ஆண்டுக்கு ₹6 லட்சம்—இது உங்கள் ஆரம்ப முதலீட்டில் 6%.
ஆனால், இன்னைக்கு இருக்கும் ₹50,000 மதிப்பு, 10 வருஷம் கழிச்சு இருக்குமா? 6% பணவீக்கத்தைக் (Inflation) கணக்கில் கொண்டால், இன்றைக்கு ₹50,000 செய்யும் செலவுக்கு 10 ஆண்டுகள் கழித்து மாதம் ₹89,500 தேவைப்படும்!
அப்போ "10% வருமானம் வருது, அதனால் நான் 10% பணத்தை வெளியே எடுப்பேன்" என தவறாகக் கணக்கு போடக் கூடாது.
ஏனெனில், ஷேர் மார்க்கெட் ஒரே சீராக உயராது. மார்க்கெட் இறங்கும்போது நீங்கள் தொடர்ந்து ஒரே தொகையை வெளியே எடுத்தால், உங்கள் போர்ட்ஃபோலியோவில் அதிக யூனிட்கள் விற்கப்பட்டு, முதலீட்டின் ஆயுள் குறைந்துவிடும்.
சமீபத்தில் செபி (SEBI) வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில்கூட, முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய Customised SWP முறைகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SWP தொடங்கும் முன்... இந்த 5 கேள்விகளைக் கேளுங்கள்!
எதற்காகப் பணம் எடுக்கிறேன்? (மாதச் செலவா, கல்விக்கா, ரிட்டயர்மென்ட்க்கா?)
இன்றைக்கு எனக்கு எவ்வளவு பணம் தேவை? (தோராயமாக இல்லாமல் சரியான தொகையைக் கணக்கிடுங்கள்)
பணவீக்கம் அதை எப்படி மாற்றும்? (எதிர்கால விலைவாசியைக் கணக்கில் கொள்ளுங்கள்)
எதிர்காலத்திற்காக எவ்வளவு பணம் முதலீட்டிலேயே இருக்க வேண்டும்?
மார்க்கெட் சரிந்தால் என் பிளான் என்ன?
இலக்கு - நிதி சுதந்திரம் மட்டுமே!
பணத்தைச் சேர்த்து பேங்க் புக்கில் பெரிய நம்பராகப் பார்ப்பது மட்டும் உங்கள் நோக்கமல்ல... வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெறுவதுதான் உண்மையான இலக்கு!
SIP - டேங்கில் தண்ணீரை நிரப்ப உதவும்!
SWP - அந்த தண்ணீரைச் சீராகப் பயன்படுத்த உதவும்!

Gulf NRI-களுக்கான சிறப்பு நேரலை வழிகாட்டல்!
உங்கள் முதலீட்டு நிதியைச் சரியான முறையில் பயன்படுத்தி, பணவீக்கம் மற்றும் சந்தை மாற்றங்களைச் சமாளித்து, சீரான பணப்புழக்கத்தை உருவாக்கப் பயனுள்ள வழிகாட்டல்!
நிகழ்ச்சி: அனைத்து செலவுகளுக்கும் SWP - பிளான் செய்வது எப்படி? (NRI-களுக்கான சிறப்பு நிதி திட்டமிடல் நிகழ்ச்சி)
நாள்: ஆகஸ்ட் 29, 2026 (சனிக்கிழமை)
நேரம்: மதியம் 12:30 – 02:00 மணி (இந்திய நேரம் - IST)
பேச்சாளர்: டீம் லாபம்
முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-aug29-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug29_2026
இன்றே முன்பதிவு செய்யுங்கள்... உழைத்த பணத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிம்மதியான எதிர்காலத்தை அமையுங்கள்!
(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் விளக்க நோக்கத்திற்காக மட்டுமே.)




















