திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு ...
சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி அன்புமணி ஆதரவாளர்கள் பொய்யான புகார் மனுவை வழங்கி உள்ளதாகவும், பொய் புகார் வழங்கிய நபர்கள் மீதும் அவர்களை தூண்டிவிட்ட அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சேலத்தில் பாமக செயற்குழு கூட்டம் நடத்தக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் வழங்கிய மனுவில் ராமதாஸின் படம் இடம்பெற்றுள்ளது. ராமதாஸின் படத்தை பயன்படுத்தி ராமதாஸ் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என புகார் மனு வழங்குவது வேடிக்கையாக உள்ளது. `சூடு, சொரணை இருந்தால் ராமதாஸ் படத்தையும், பெயரையும் பயன்படுத்தாதீர்கள்!' என பாமக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர் ராசரத்தினம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.














