சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் ...
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள், ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்கப்பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்தது.
இதன் அதிகாரபூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி அருகில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கிறார். பின் வரிசையில் டி.கே.சிவக்குமார் அமர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, " குடும்பத்தை பற்றி வெளியே பேசுபவை உண்மையற்றவை. எனது உணர்வுகளை இந்த நூலின் வாயிலாகவே வெளிக்கொணர்ந்துள்ளேன். நினைவில் இருந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். டைரி எழுதாமல் விட்டது நான் செய்த பிழை. இந்தியப் பெண் என்ற உரிமையைப் பெற போராடினேன். இந்த சுயசரிதை நூலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












