செய்திகள் :

சௌகார் ஜானகி : 'எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி..!' - முதல்வர் விஜய் இரங்கல்

post image

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 2 மணியளவில் காலமானார்.

இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்த சௌகார் ஜானகிக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் விஜய் இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி

திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

"அவர் அம்மா, நான் பிள்ளை; கண்ணீரோடு வழியனுப்புகிறேன்"- சௌகார் ஜானகிக்கு கமல்ஹாசன் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள... மேலும் பார்க்க

Sowcar Janaki: நடிகை செளகார் ஜானகி காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது ... மேலும் பார்க்க

அஞ்சாதே : நல்லதும் கெட்டதும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 17

`சினி'ஸ்கோப் 17அஞ்சாதேமருத்துவமனையில் இருக்கும் கிருபாவின் அப்பாவுடைய சிகிச்சைக்காக சத்யா பணத்தைக் கட்டிவிட்டுப் போகிறான். பணத்துக்காக அலைந்து திரிந்துவிட்டு வரும் கிருபா, அதன் பொருட்டு தங்கை உத்ராவிட... மேலும் பார்க்க

AR Rahman: `சிறகு கொடுக்கும் மேடை' - ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்ரம் & பூஜா

புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சோனி விழா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தமிழ் ஐடல்' நிகழ்ச்சியின் முதல் சீசனை, 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். இசையமைப்பாளர் ... மேலும் பார்க்க

Deepa Venkat: "இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான்" - தீபா வெங்கட் ஷேரிங்ஸ்

ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராம் & லீலா' நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில... மேலும் பார்க்க

Rio Raj: அப்போது 'ராம் இன் லீலா', இப்போது 'ராம் & லீலா'; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் 'ராம் & லீலா' படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிர... மேலும் பார்க்க