செய்திகள் :

ஜனநாயகன்: "பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா" - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

post image

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ரவி மோகன் பதிவு

அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன்.

ரவி மோகன்
ரவி மோகன்

உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது" என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

இதுவும் கடந்துபோகும்!

இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு விஜய் குறித்து பதிவிட்டிருக்கிறார். "டியர் விஜய் அண்ணா பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயலை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்துபோகும். 'ஜன நாயகன்' வெளியாகும் நாளில் தான் உண்மையான பொங்கல் தொடங்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சிம்பு
சிம்பு

மிகப்பெரிய 'Farewell' படம்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் பதிவில், " எதுவாக இருந்தாலும் சரி... இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய 'Farewell' படமாக இருக்கும்" என்று விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறார்.

பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்?

தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' தேதி ... மேலும் பார்க்க

தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!

பொங்கல் வெளியீடாக விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத... மேலும் பார்க்க

Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.பெங்... மேலும் பார்க்க

"புதிய கதைகளைச் சொன்னேன்; ஆனால், விஜய் சாருக்கு ‘பகவந்த் கேசரி’தான்..." - இயக்குநர் அனில் ரவிபுடி

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.கூடிய விரைவில் பிரச்னைகள் முடிக்கப்பட்டு திரைப்படம் வெளியாக... மேலும் பார்க்க

"என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம்" - நடிகர் ஜீவா

'பேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இ... மேலும் பார்க்க