செய்திகள் :

'ஜார்ஜ் கோட்டை அறையை காலி செய்யும் முதல்வர் விஜய்!' - காரணம் என்ன?

post image

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தன்னுடைய அலுவலகத்தை மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அரசே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

CM Vijay
CM Vijay

தலைமைச் செயலகத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் முதல் தளத்தில் முதல்வருக்கான அறை அமைந்திருக்கிறது. அதில்தான் முன்னாள் முதல்வர்களும் தங்கள் அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் இரண்டரை மாதங்களாக அந்த அறையில்தான் தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இப்போது முதல்வரின் அறை கோட்டை வளாகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தளத்திற்கு மாறவிருக்கிறது. இதுசம்பந்தமாக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இடநெருக்கடி காரணமாக முதல்வர் மற்றும் அவரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை நாமக்கல் மாளிகையின் 10 வது தளத்துக்கு மாற்றப்படுகிறது' எனக் கூறப்பட்டிருக்கிறது.

Vijay
Vijay

அந்த இடத்தில் ஏற்கனவே இருக்கும் அதிகாரிகளுக்கு மற்ற தளங்களிலும் கலைவாணர் அரங்கத்திலும் தற்காலிகமாக மாற்று இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான வட்டத்தினர், 'முதல்வருக்கு ஜோதிடத்தின் மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. அவரின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் தான் கடலை பார்த்த மாதிரியாக உச்சத்தில் இருக்கும் இடத்தில் அறையை அமைக்க வேண்டும் ஆலோசனை கொடுத்தார். அதேமாதிரி, முதல்வரின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் பைல்களை பார்க்கவும் முதல்வர் சேம்பரில் போதிய இடமில்லை. அவர்களுக்கும் சௌகரியமாக ஒரு இடம் வேண்டும் என்பதால்தான் தன்னுடைய அறையை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் மாற்றியிருக்கிறார்' என்றனர்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க