இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?
'ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் டு தவெக எம்.எல்.ஏ வரை' - மரகதம் குமரவேலின் அரசியல் பயணம்
கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.
இதனால் இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவியது.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்யபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி, நாதகவின் கார்த்திகா மற்றும் சிபிஐ-யின் லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 85.88 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இன்று மதுராந்தகம், தாராபுரம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை தவெக பதிவு செய்திருக்கிறது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 64,711வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
யார் இந்த மரகதம் குமரவேல்?
சென்னையின் மடிப்பாக்கம் பகுதியில் 1982-இல் பிறந்த இவர், பட்டப்படிப்பு முடித்த கையோடு அதிமுக இயக்கத்தில் இணைந்து தீவிர களப்பணியாற்றி இருக்கிறார்.
அதிமுகவில் 20 வருடங்களாகப் பணியாற்றி இவர் 2006-ல் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். 2011-ல் ஒன்றிய குழு தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். 2014-ல் ஜெயலலிதாவால் காஞ்சிபுர நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்ட மரகதம் குமரவேல் 2016 முதல் 2019 வரை மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கழக மகளிர் அணி இணைச் செயலாளர், கழகச் செயற்குழு உறுப்பினர் போன்ற கட்சிப்பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.
2021-ல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக எம்.எல்.ஏ- வாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டிருந்தார். இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசல்களால் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து இந்த இடைத்தேர்தலைச் சந்தித்து மீண்டும் வெற்றி பெற்று மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ ஆகியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















