செய்திகள் :

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! - இருவர் கைது!

post image

மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட குற்றவாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக சின்னுசாமி, தற்காலிக உதவியாளராக பிரகாஷ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மது வாங்க வந்த கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, லைன்கொல்லையைச் சேர்ந்த சதீஷகுமார் ஆகியோர் 'பணம் குறைவாக உள்ளது, அடுத்த முறை வரும்போது தருகிறோம்' என்று கூறி ரூ 30 குறைவாக கொடுத்து இரண்டு பீர் பாட்டில் வாங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து ரூ 40 குறைவாக கொடுத்து மேலும் ஒரு பீர் பாட்டில் கேட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடை

அதற்கு விற்பனையாளர் மறுக்கவே, அவரிடம் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு பீர் பாட்டில் கொடுத்துள்ளனர்.

மாலை மீண்டும் அங்கு வந்த இருவரும், தங்கள் டூவீலரிலிருந்த பெட்ரோலை காலி பீர் பாட்டிலில் நிரப்பி துணியால் அடைத்து பெட்ரோல் குண்டுபோல் தயாரித்து திரியில் தீயை வைத்து டாஸ்மாக் கடைக்குள் வீசியுள்ளனர். கடைக்குள் வெடித்து தீப்பற்றியதில் விற்பனையாளர் பிரகாஷின் முகம், தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது, பெட்ரோல் குண்டு வீசிய இருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க