செய்திகள் :

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

post image

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது, “புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், தளபதி ஆட்சியில் வரம் வாங்கிக்கொண்டு பிறக்கும் குழந்தைகள். அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாஸ்மாக் ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் கடைகளைத் திறக்க ஆரம்பித்துவிட்டனர். பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது.

தவறு யார் செய்தாலும், தவறுதான். அரசு தவறு செய்தாலும், அமைச்சர் தவறு செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். டாஸ்மாக் பிரச்னைக்கு தி.மு.க, அ.தி.மு.க.தான் காரணம். இன்றைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தான் காரணம்.

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

கடந்த காலங்களில் இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது ஒரு உதாரணம்தான். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பிரச்னைகள் உள்ளன. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் பிரச்னை என்பது 200 படிகள் கொண்டது. அதில் நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளையும் ஏறி, டாஸ்மாக் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்... மேலும் பார்க்க

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" - அமைச்சர் நிர்மல்குமார்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" - ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி - ஹார்முஸ் நீர்ச்சந்தி.உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக... மேலும் பார்க்க

கே.என். நேரு வீட்டில் சோதனை: "தவெகவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம்" - ஸ்டாலின் பதிவு

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.இதற்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து முன்... மேலும் பார்க்க

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ - கோவை மாநகராட்சி சர்ச்சை

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறிய... மேலும் பார்க்க

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" - லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்... மேலும் பார்க்க