செய்திகள் :

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

post image

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. தவெக இரண்டு தொகுதிகளையுமே வென்றிருந்தது. இந்நிலையில், அந்தத் தேர்தல் முடிந்த சூட்டோடு அடுத்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேலைகளை கையில் எடுக்க முதல்வர் விஜய் முடிவெடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், 'மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வர் விஜய் கூட்டணி கட்சியினர் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ம.ச.வெ.கூ எனப் பெயரும் வைக்கப்பட்டது. டெல்லியிலிருந்து ஒரு முக்கிய சோர்ஸ் மூலம் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கிடைக்கப் பெற்ற மெசேஜின் மூலம் அந்தக் கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தை முதல்வர் நடத்தினார்.

CM Vijay
CM Vijay

இப்போதும் அதேமாதிரி டெல்லியிலிருந்து நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் செய்தி கிடைத்திருக்கிறது. அதன்படி எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் இந்த மாத இறுதிக்குள் முடிய வாய்ப்பிருப்பதாகவும், அதன்பிறகு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்றும் மெசேஜ் கிடைத்திருக்கிறது. அதனால்தான் முதல்வரும் வேகமாக களத்தில் இறங்க ரெடியாகி வருகிறார். நவம்பர் 2 ஆம் தேதி விராலிமலை செல்லும் முதல்வர், மறுநாளே பெருந்துறை செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். அதேமாதிரி, நவம்பர்14 குழந்தைகள் தினத்தை அம்பாசமுத்திரத்தில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். மூன்று தொகுதிகளிலும் ரோடு ஷோ + பொதுக்கூட்டமும் நடத்தவிருக்கிறார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வென்றிருந்தாலும், வாக்கு வித்தியாசம் நெகட்டிவாக பார்க்கப்பட்டது. திமுக இரண்டாமிடம் பிடித்தது உடன்பிறப்புகளுக்கு எனர்ஜியையும் கொடுத்திருக்கிறது. இந்த முறை அதையும் மனதில் வைத்து பெரிய வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார். முதல்வரின் வருகைக்குப் பிறகு தொகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அமைச்சரவையையும் களத்தில் இறக்கவிருக்கிறார்கள்' என்றனர்.

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்த... மேலும் பார்க்க

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்!

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை ஆறு ஆண்ட... மேலும் பார்க்க

"இனி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்" - உதயநிதி

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வர... மேலும் பார்க்க

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' - இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது.தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்ட... மேலும் பார்க்க

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்க... மேலும் பார்க்க