செய்திகள் :

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

post image

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிழக்கு டெல்லியின் மாண்டவளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகாரில், ``எனக்கு அறிமுகமான அந்த நபர் 'மோமோஸ்' சாப்பிடலாம் என்று கூறி காரில் அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து, காரில் எரிபொருள் (CNG) நிரப்ப வேண்டும் என்று கூறி, காரைத் திடீரென ஆள்நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய பகுதிக்குத் திருப்பினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பாழடைந்த பகுதிக்குச் சென்றதும், காரை நிறுத்த மறுத்த அந்த நபர், என்னிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டார்.

மேலும், என் அனுமதியின்றி உடலைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதோடு, தன்னை காரை விட்டு கீழே இறங்காதவாறு தடுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் காரின் ஜன்னல் வழியே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என மிரட்டி தப்பினேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கொடூரமான சூழ்நிலையிலும் மனதை உலுக்கும் ஒரு வீடியோவை அந்தப் பெண் தனது மொபைல் போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.

அதில், "என்னை விட்டுவிடுங்கள்" என்று அந்தப் பெண் கதறி அழுவதும், அதற்கு அந்த நபர் "இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும்" என்று கூறி, பெண்ணின் நற்பெயரைக் கெடுத்துவிடுவதாக மிரட்டும் அதிர்ச்சி உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் பயமும் ஆத்திரமும் அடைந்த அந்த இளம்பெண், காரின் ஜன்னல் வழியே வெளியே குதிக்க முயன்றுள்ளார். "நீ என்னை மீண்டும் தொட்டால், ஓடும் வாகனத்தின் முன்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்; என் உடலைத் தொட உனக்கு அனுமதியில்லை" என்று அந்த நபர் முன் தைரியமாகப் போராடியுள்ளார்.

இந்த வீடியோ ஆதாரம் தற்போது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள நபரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க