செய்திகள் :

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

post image

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சுமனை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிஷ் வீட்டில் சுமன் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆசிஷ் சம்பவம் நடந்த வீட்டிற்குள் சென்றுவிட்டு அவசரமாக வெளியில் செல்வது பதிவாகி இருந்தது.

கொலையாளி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆசிஷ் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மும்பை போலீஸார் ஆந்திராவிற்கு விரைந்தனர். அவர் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்ற போது கைது செய்தனர். அவரை மும்பைக்கு கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி இதற்கு முன்பு ஆசிஷ் நிர்ப்பந்தம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. ஆசிஷ் கோரிக்கையை அப்பெண் நிராகரித்துள்ளார். சுமன் கடந்த சில ஆண்டுகளாக ஆசிஷ் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் முதலில் ஆசிஷ் சகோதரர்தான் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசிஷ் வந்து சேர்ந்து கொண்டார்.

ஆசிஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுமன் அவரது வீட்டு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

இதையடுத்து ஆசிஷ் சுமனின் மகனுக்கு போன் செய்து, உனது தாயார் தொடர்ந்து எங்களது வீட்டில் வேலை செய்யாவிட்டால் அல்லது எனது பாலியல் ஆசைகளுக்கு இணங்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். சுமனிடம் அவரது மகன் இது குறித்து விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். சுமனின் மகன் ஆசிஷை நேரில் சந்தித்து தனது தாயாரிடமிருந்து விலகி இருக்கும்படி எச்சரித்தார்.

ஆசிஷ் சகோதரர் சுமனை தொடர்பு கொண்டு இனி எனது சகோதரர் ஆசிஷ் என்னுடன் வீட்டில் இருக்கமாட்டார் என்றும், எனவே தொடர்ந்து வந்து வீட்டு வேலைகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். எனவே சுமன் மீண்டும் வீட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். இது குறித்து தெரிந்து கொண்டுதான் சுமன் வீட்டில் இருந்த நேரம் பார்த்து, ஆசிஷ் கொலை செய்துவிட்டு சென்றுள்ளார். சம்பவம் நடந்தபோது என்ன நடந்தது என்பது ஆசிஷை விசாரித்தால்தான் தெரிய வரும்" என்று போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க