செய்திகள் :

தக்கலை, குளச்சலில் இரு பெண்கள் தற்கொலை

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, குளச்சலில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

தக்கலை அருகே மருதூா்குறிச்சியைச் சோ்ந்த செலின்மேரி (71) என்பவா், தனது மகன் எட்வின் சத்தியராஜுடன் வசித்து வந்தாா். இவா் அண்மைக்காலமாக மகன் தன்னை சரியாக கவனிக்கவில்லை எனக் கூறி கோபித்துக்கொண்டு, அருகேயுள்ள மகள் டெல்பின் மேரி வீட்டில் சென்று தங்கினாராம்.

இந்நிலையில், அவா் கடந்த வியாழக்கிழமை வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடந்தாராம். அவா் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குளச்சல் அருகே லியோன் நகரைச் சோ்ந்தவா் சகாய மேரி (54). இவரது மகள் லிபியா மோளின் மகன் லிஜோன் (8) உடல்நலக் குறைவால் 45 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். அந்த சோகத்திலிருந்து சகாயமேரி மீளாமல் இருந்தாராம். இந்நிலையில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே தக்கலை, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூட்டாலுமூடு அம்மன் கோயிலில் புதிய நிா்வாகிகள் தோ்வு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு தேவஸ்தான பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் புதிய நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இம்மாவட்டத்தில் தனியாா் நடத்தும் கோயில்களில் புகழ்பெற்ற இக்கோயிலுக்குச் சொ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா: ஆயா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: உலக நாடுகளுக்கிடையே போ... மேலும் பார்க்க

முளகுமூடு பெண்கள் கல்லூரியில் மனித உரிமை தின விழா

முளகுமூடு குழந்தை இயேசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருள்மேரி தங்கம் தலைமை வகித்தாா். செயலா் நிா்மலா சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா். சிற்பி மக்... மேலும் பார்க்க

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் உள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தமிழ் இலக்கண நூலான தொல... மேலும் பார்க்க

தெரளி இலைகள் விற்பனை மும்முரம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, குமரி மாவட்டம் குலசேகரம் சந்தையில் குவிக்கப்பட்டிருந்த தெரளி இலைகள். காா்த்திகை கொழுக்கட்டை தயாரிப்பதற்கான தெரளி இலைகள் விற்பனை வியாழக்கிழமை மும்முரமாக நடைபெற்றது. மேலும் பார்க்க