செய்திகள் :

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

post image

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நடித்த விளம்பரம் தொடர்ந்து அனைத்து வகையான மீடியாக்களிலும் வந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தற்போது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாநிலம் முழுவதும் கலப்படம், உணவகங்களில் சுத்தம் போன்றவற்றை உறுதி செய்ய தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது.

பல முன்னணி உணவகங்கள் சரியாக சுத்தத்தை பின்பற்றவில்லை என்றும், காலாவதியான உணவுப்பொருள்களை வைத்திருந்ததாகவும் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது விமல் எலைச்சி பான் மசாலாவில் நடித்ததற்காக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அந்த நோட்டீஸில் விமல் எலைச்சி பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை உடனே நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளக்கம் அளிக்க 15 நாள் கெடு

அதோடு அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இருந்து விளம்பரம் தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கத்தை அகற்றவும் இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நடிகர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது போன்று பான் மசாலா மற்றும் குட்கா விளம்பரங்களில் நடித்ததாக பாலிவுட் நடிகர்கள் மீது விமர்சனம் வந்தது. அப்போது அவர்கள் உற்பத்தியை நிறுத்தவேண்டியதுதானே என்றும், இது எங்கள் தொழில் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்ட... மேலும் பார்க்க

` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள ... மேலும் பார்க்க

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க