மகரம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: கடன்கள் தீரும் காலம் இது! - 11 பலன்கள் | கே.பி...
தனுசு | 2026 ராகு-கேது பெயர்ச்சி: செலவுகளில் கவனம் தேவை! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்
1. வாக்குஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்கவேண்டியது வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு.

2. வெளிவட்டாரத்தில் ஓரளவு மதிப்பு இருக்கும். வரவை விடவும் செலவுகளில் கவனம் செலுத்தவேண்டும். வீண் கௌரவத்திற்காகக் கையிருப்பைக் கரைக்கவேண்டாம். அதேபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்குகளில் இழுபறி ஏற்படும்.
3. குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்து முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். மகளின் உயர் கல்வியில் தடைகள் விலகும். சிலர், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாடு சென்று வருவீர்கள்.
5. சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) இனம்புரியாத பயம் வந்து போகும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) தொட்டது துலங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நாடாளுபவர்களின் ஆதரவு கிடைக்கும்.
6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடவேண்டாம்.
7. மற்றவர் விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள். செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கவேண்டாம். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம்.
8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) சுபகாரியங்கள் கூடி வரும். சிலர் புதிதாக வீடு, நிலம் வாங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, தடைபட்டுக் கொண்டிருந்த பணிகள் எல்லாம் முழுமையடையும். வழக்குகள் சாதகமாகும்.
9. குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கும்.
10. வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும்.
11. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்குப் புதிய சலுகைகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு, விருதுகள் கிடைக்கும்.












