செய்திகள் :

``தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு; உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்"- அன்புமணி

post image

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது எனவும் உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தளப் பதிவில், "இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்வு: உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. தேசிய அளவிலான பணவீக்கம், இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக்குப்பிடிக்கும் அளவான 6 விழுக்காட்டைத் தாண்டி, 6.09 விழுக்காடாக அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதை விட 1.20% கூடுதலாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புற மக்கள் தான் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிவரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா முழுவதுமே உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை உயர்வு தான் பணவீக்கத்திற்கு வகை செய்துள்ளன என்றாலும் கூட, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே அதிகரித்துவரும் அரிசி விலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.

மக்களை பாதிக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்படி கடந்த 4 மாதங்களாகவே வலியுறுத்தி வருகிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால், அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரூ.30 விலையில் சன்ன ரக அரிசி வழங்குவதாகக் கூறி விட்டு, நியாயவிலைக் கடை அரிசியையே மெருகூட்டி வழங்கியதால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் பணவீக்கம் உச்சத்தை அடைய இதுவே காரணம்.

தமிழ்நாட்டில் ஒருபுறம் தனி நபர் வருமானம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் நிலையில், இன்னொருபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால், அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருள்களையும் மானிய விலையில் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அவற்றின் விலைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்" என்பதை தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71... மேலும் பார்க்க

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நி... மேலும் பார்க்க

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமா... மேலும் பார்க்க

அயலக உதவித்தொகை திட்டம்: விமர்சித்த திமுக; விளக்கம் அளித்த சமூக நீதித்துறை!

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்... மேலும் பார்க்க