செய்திகள் :

"தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!" - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

post image

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான அரசாணையைத் தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது.

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து', 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை 9-ஆம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்தே அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்' முதலில் பாடப்படுவது மரபாகவும் அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

ஆகவே, 'தமிழ்த்தாய் வாழ்த்து' தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`இனி பெட்ரோல் பங்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது?' - TNPDA எச்சரிக்கையின் பின்னணி என்ன?

சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 830 பேருடன் சில பெட்ரோல... மேலும் பார்க்க

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் உறவின... மேலும் பார்க்க

Kanimozhi: "காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க அரசு நடத்தும் நாடகம்தான் இது!" - கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு. ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இத... மேலும் பார்க்க

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளு... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் - 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற... மேலும் பார்க்க