செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

post image

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், வெறும் அரசுத் தீர்மானம் என்பது ஆளுநரையோ அல்லது பிற அதிகார அமைப்புகளையோ முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பது சந்தேகத்திற்குரியது. தீர்மானம் வேறு, சட்டம் வேறு. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாடுவதை உறுதிசெய்ய அதற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

முதல்வர் விஜய்

அரசு கொண்டுவரும் மசோதா மூலமாகச் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றால் மட்டுமே இது நிலையான ஒன்றாக மாறும். அத்தகைய சட்டப்பூர்வப் பாதுகாப்பை அரசு பெறத் தவறினால், ஆளுநர் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளி, அதை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் எங்கள் உறுப்பினர் வலியுறுத்தியபோது, அரசு தரப்பில் எவ்விதப் பதிலும் கூறப்படாமல் மௌனம் காக்கப்பட்டது. "தீர்மானமே போதுமானது" என்ற சபாநாயகரின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல.

எனவே, நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைக் கொண்டுவந்து, சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைச் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் முன்வைக்கிறோம். ஒன்றிய அரசு என்றாலே இந்த தவெக அரசு பயப்படுகிறது. சட்ட பூர்வமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதற்கு தவெக அரசு மவுனமாக இருந்தது. சட்டம் என்பது வேறு, தீர்மானம் என்பது வேறு. தீர்மானம் என்பதை யார் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். சட்டபூர்வ அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அரசு அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திலாவது அரசு இதற்கான தெளிவான பதிலையும் உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்" என்றார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங... மேலும் பார்க்க