செய்திகள் :

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று 'நம்பிக்கை வாக்கெடுப்பு' - பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்?|Live Updates

post image

விஜய்க்கு வேலுமணி தரப்பு ஆதரவு?

அதிமுக பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. இதில் எஸ்.பி.வேலுமணி அணி இன்று தவெகவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று தெரிய வருகிறது.

நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதலமைச்சர் விஜய் வீட்டிற்கு வருகை தந்ததும், அங்கே எஸ்.பி.வேலுமணியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜய் - வேலுமணி
விஜய் - வேலுமணி

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு'ம் இன்று தான் நடைபெறுகிறது.

தவெக ஏற்கெனவே 107 தொகுதிகள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை.

தவெகவின் கையில் தற்போது ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தொகுதிகளோடு மொத்தம் 120 தொகுதிகள் இருக்கின்றன. அதனால், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தவெகவிற்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

விஜய்
விஜய்

தமிழ்நாட்டில் இன்னும் அரசியல் பரபரப்புகள் ஓயவில்லை. இன்றைய அரசியல் நிகழ்வுகளை இந்த Live Blog-ல் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

’புரிதல் இன்றி த.வெ.க அரசை விமர்சிப்பது நியாயம் இல்லை’ – எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கோரிக்கை

முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார... மேலும் பார்க்க

"எடப்பாடி நியமித்தவர் தான் கொறடா; அவர் உத்தரவை மீறினால் கட்சி தாவல்.!" - இன்பதுரை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து அதிமுக பிரிவாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் சில எம்எல்ஏக்கள் செயல்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முக... மேலும் பார்க்க

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க