செய்திகள் :

தமிழ்நாட்டின் சில திரையரங்கங்களில் தனுஷின் 'O.M' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் - என்ன பிரச்னை?

post image

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. சந்தனக் கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இதில் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 20) இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஓம் படத்தில்...
ஓம் படத்தில்...

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனி திரையரங்குகளில் 'ஓம்' திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வருவாய் பங்கீடு பிரச்னையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் விநியோக உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளைப் பொறுத்தவரை, விநியோக நிறுவனத்திற்கு 80 சதவீதமும், திரையரங்குகளுக்கு 20 சதவீதமும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தனி திரையரங்குகளுக்கு விநியோக நிறுவனம் சொன்ன விகிதம் ஒத்துவராததால், தனி திரையரங்கு உரிமையாளர்கள், 'ஓம்' திரைப்படத்தைத் திரையிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலைத் தீர்க்க, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோக நிறுவனத்திற்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OM: ``முதல்வர் விஜய்க்கு நன்றி; ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" - நடிகர் தனுஷ்

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கு முன்பு அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்ற... மேலும் பார்க்க

Aakasamlo Oka Tara: "சினிமாவுக்கு வரலன்னா கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன்"- ஜி.வி பிரகாஷ்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ச... மேலும் பார்க்க

Aakasamlo Oka Tara: "ஆரம்பத்தில் நாயகியை மையமாகக் கொண்ட படமாகத் தோன்றியது; ஆனால்.."- துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ச... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி

மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அப்பா குட்டி'. நவம்பர் 20ம் தேதி இந்தப் படம் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ.1... மேலும் பார்க்க

O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த த... மேலும் பார்க்க