“உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம் என்பது இந்தியக் கலாசாரம் அல்ல" - சேமிப்பை வலி...
சென்னை: மாடியிலிருந்து குதித்து பட்டதாரிப் பெண் தற்கொலை; ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் மகன் கைது
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வீன். பட்டதாரியான இவர், சென்னையில் தங்கியிருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் பாலாஜி, சென்னை சோழிங்கநல்லூரில் தங்கியிருக்கிறார்.
மேலும் இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பர்வீனும் வருண் பாலாஜியும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் சில தினங்களாக பர்வீனுடன் வருண் பாலாஜி பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த பர்வீன், வருண் பாலாஜி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். பின்னர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதையடுத்து 9-வது மாடிக்குச் சென்ற பர்வீன், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் அதிர்ச்சியடைந்தார் வருண் பாலாஜி. அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பர்வீனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பர்வீன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பர்வீனின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வருண் பாலாஜியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு பர்வீனைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் வருண் பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். இவர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



















