செய்திகள் :

"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்; எனக்கு பொறாமையாக இருக்கிறது" - பவன் கல்யாண்

post image

"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் என்னால் அது முடியவில்லை" என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய முதல்வர் விஜய் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தவிர தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் ஜன சேனா கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பவன் கல்யாண், "தமிழக அரசியலை நான் கவனித்து வருகிறேன். அவர்கள் மிக எளிதாக அரசியல் செய்கிறார்கள்.

கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலம் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். எனக்கு அது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். என்னால் அது முடியவில்லை.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க