செய்திகள் :

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

post image

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது.

நலம் காக்கும் அணியினர்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். 

விஷால்

இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்... மேலும் பார்க்க

'பாலு ஜுவல்லர்ஸ்' தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி

கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்... மேலும் பார்க்க

"முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன்" - போஸ் வெங்கட் பேட்டி

"திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது" என்கிறார் போஸ் வெங்கட்.திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்... மேலும் பார்க்க

"13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..!" - சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், ... மேலும் பார்க்க

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்க... மேலும் பார்க்க

Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முயற்சி கைகூடுகிறதா?

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தேங்காய் ஸ்ரீனிவாசன் (சுப்பு பஞ்சு) மனைவி (தேவதர்ஷினி), குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை அம்மு (மேக்னா சுமேஷ்) ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்... மேலும் பார்க்க