செய்திகள் :

`தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஸ்டாலின்; இனியாவது திருந்துங்கள்' - நிர்மல் குமார்

post image

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவைத் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 40 நாட்களாக தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிர்மல் குமார், "தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுகின்றனர். தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டு பல கோடிகளைத் தருவதாகப் பேசுகின்றனர்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

இன்று ஒரு எம்எல்ஏவின் புகாரின் அடிப்படையில் தான் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனால்தான் மு.க ஸ்டாலின் 30 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்கிறார். மு.க ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த கெடுதலுக்காக மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிடுங்கள். முதல்வராக இருந்தவர் இதற்கு முன் தோற்றிருக்கிறாரா? இது மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். இதற்கு மேலாவது திருந்துங்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க