செய்திகள் :

தருமபுரி: விஜய் அலை, ராமதாஸின் எதிர்ப்பு; ஆனாலும் சாதித்த சௌமியா அன்புமணி; உற்சாகத்தில் பாமக!

post image

அனைவராலும் எதிர்பரப்புடன் பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதியில் விஜய் அலையையும், மாமனார் ராமதாஸ் எதிர்ப்பு நிலையையும் கடந்து 20,896 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாமக-வின் சௌமியா அன்புமணி.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

பா.ம.க-வின் சிட்டிங் தொகுதியான தருமபுரி தங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் போட்டியிட்டார் சௌமியா. அதனாலேயே தருமபுரியைக் குறிவைத்து கடந்த சில மாதங்களாக சௌமியா தீவிரமாக வேலை செய்து வந்தார்.

அ.தி.மு.க கூட்டணியில் இல்லாமலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். இந்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தருமபுரியில் போட்டியிடுவது என முடிவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பின்பு பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்பு தருமபுரி தொகுதியின் ஒரு கிராமம் விடாமல், ஒரு தெரு விடாமல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடைய மகள்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொகுதியிலுள்ள விவசாயப் பிரச்னை, பெண்கள் பிரச்னைகள் பற்றி பேசியவர், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி கொண்ட தருமபுரி புது பேருந்து நிலைய பிரச்னையையும் கையிலெடுத்து தொடர்ந்து பேசினார்.

சௌமியா அன்புமணி - பாமக
சௌமியா அன்புமணி - பாமக

அதேநேரம் அவரை எதிர்க்கும் தேமுதிக டாக்டர் இளங்கோவனோ மக்களவைத் தேர்தலில் இருமுறை தோல்வியடைந்தவர். தன்னை உள்ளூர்வாசி என்று பரப்புரை செய்தாலும், நீண்டகாலமாக மக்களிடம் தொடர்பிமில்லாமல் இருந்ததும், தருமபுரி தி.மு.க நிர்வாகிகளின் கோஷ்டி வேலைகளும் தே.மு.தி.க-வுடன் வி.சி.க-வினர் முரண்பட்டு நின்றதும் அவருக்கு எதிராக நின்றது. அதனால்தான் அவர் மூன்றாமிடம் தள்ளப்பட்டு தவெக சிவன் 72817 வாக்குகல் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.

பெரிய அளவில் வாக்குகளைப் பிரித்து சௌமியாவின் வெற்றியைத் தடுப்பார் என்று சொல்லப்பட்ட டாக்டர் ராமதாஸின் வேட்பாளர் சரவணன் 1031 வாக்குகள் மட்டுமே பெற்று அதிர்ச்சி தந்தார்.

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் அலை அடித்து மு.க ஸ்டாலின் முதல் திமுக, அதிமுக, முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தோல்வி அடையச் செய்துள்ள நிலையில் தருமபுரியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக 20,896 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று சாதித்துள்ளார் சௌமியா அன்புமணி.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க