செய்திகள் :

`தற்குறி தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை கேள்விகுறியாக்கியிருக்கிறார்கள்'- முதல்வர் விஜய்

post image

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்திருக்கிறது.

இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏ- வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதல்வர் விஜய் நேரில் சென்றிருக்கிறார். முதல்வரான பிறகு விஜய் சந்திக்கும் முதல் மக்கள் சந்திப்பு இது. வழியெங்கும் மக்கள் திரண்டு வரவேற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், " திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என் சிறப்பான நன்றி. தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயமோ அதே மாதிரி என்னுடைய இதயத்திற்கும் நீங்கள் நெருக்கம். 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்தில் தொடங்கிவிட்டார்கள்.

பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணா வழியில் நாம் இருக்கிறோம். 1977 தேர்தலை விட அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறோம். கோட், சூட் அணிவதையும் விமர்சிக்கிறார்கள். நான் என்ன கலர் கலராகவா அணிகிறேன். நான் இரண்டே கலர் அணிகிறேன். நம் மனது மாதிரி கறுப்பு வெள்ளை. தமிழ்நாட்டின் முதன்மை சேவகன் நான்.

திருச்சி மக்களை சந்தித்த முதலவர்
திருச்சி மக்களை சந்தித்த முதலவர்

இருவருக்கு இடையில்தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. திமுக நமக்கு செய்வது எல்லாம் நன்மைக்கே. ஜென்ஸியை கவர திமுக காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைத்தவர் தான் ஸ்டாலின். தற்குறி தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விகுறியாக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவர்களா? எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?" எனக் காட்டமாக திமுக-வை விமர்சித்திருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க