செய்திகள் :

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

post image

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு துளைத்து தனது அறையில் பலியாகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு லூதியானா தொகுதி எம்எல்ஏவான குர்பிரீத் கோகி (57) நேற்று (ஜன. 10) இரவு தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது தனது கைத் துப்பாக்கியை அவர் துடைத்துக் கொண்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து அவரது தலையில் குண்டு துளைத்ததாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு உடனடியாக குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று அவரை தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக குர்பிரீத் கோகு குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | ஆம் ஆத்மி கட்சியால் தில்லிக்குப் பேரழிவு: பாஜக தலைவர்!

பஞ்சாப் முதல்வர் இரங்கல்

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் வருத்தத்துடன் குறிப்பிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், ”மரியாதைக்குரிய எம்எல்ஏ குர்பிரீத் கோகி ஜி காலமானார் என்ற இதயத்தை உடைக்கும் செய்தியை அறிந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டு மிக வருத்தமாக இருக்கிறது. கோகி ஜி மிகவும் அன்பானவர். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். கடவுள் அவரது ஆன்மாவை ஆசீர்வதித்து, இந்த இழப்பைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்த கோகி, லூதியான மேற்கு தொகுதியில் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-யுமான பாரத் பூஷன் அஷுவைத் தோற்கடித்தார்.

நேற்று (ஜன. 11) இறப்பதற்கு முன்னர் லூதியானா பார் அசோசொயேஷன் நடத்திய ஒரு நிகழ்வில் பஞ்சாப் பேரவைத் தலைவர் குல்தர் சந்த்வனுடன் கோகி கலந்துகொண்டார்.

இரவில் திடீரென அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்று பலியான சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.இன்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு - 75.. டாலருக்கு - 86: காங்கிரஸ் விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய்... மேலும் பார்க்க

தில்லி ஜாட் இன மக்களுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால்

இடஒதுக்கீடு விவகாரத்தில் தில்லி ஜாட் இனத்தவர்களுக்கு பாஜக துரோகம் இழைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். வரும் பிப்ரவரி 5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க