செய்திகள் :

அமலாக்கத்துறை டிஜிபி-க்கு அனுப்பிய கடிதம் வெளியான விவகாரம் - ஆதி நாராயணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

post image

தமிழ்நாடு டிஜிபி-க்கு அமலாக்கத்துறை எழுதிய ரகசியக் கடிதம் வெளியான விவகாரத்தில், மருதுசேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யக் கோரி, மருதுசேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

பரபரப்பு ஏற்படுத்திய இந்த மனு மீதான விசாரணையின்போது, 'மனுதாரர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. அவர்மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரஞ்சோதி என்பவர், 'அமலாக்கத்துறை, டிஜிபி-க்கு அனுப்பிய ரகசியக் கடிதம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எப்படிக் கிடைத்தது? இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று மனு தக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கின் அடிப்படையில் ரகசியக் கடிதத்தை மனுதாரருக்கு வழங்கிய மத்திய அரசு அதிகாரிகள், அதற்கு உதவிய வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க டிஜிபி உத்தரவிட்ட நிலையில், தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதி நாராயணன் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ். ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, 'இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழஙகக் கூடாது' என்று அரசுத் தரபில் கூறப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 'மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யலாம்' என்றவர், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!'- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!

"நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும்" என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முஏற்... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.மதுரை உயர் நீதி... மேலும் பார்க்க

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக... மேலும் பார்க்க

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க