`கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து குவியும் ஆதரவாளர்கள்?' - சர்...
தவெக அமைச்சரவையில் விசிக! வன்னியரசுக்கு என்ன துறை ஒதுக்கீடு?
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே.21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிதாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
காங்கரஸ் ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, யுயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அமைச்சரவையில் இடப்பெறுவதை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு திருமாவளவனின் விசிக கட்சி தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சமூக நீதித்துறை அமைச்சாராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல ஐயூஎம்எல் கட்சி சார்பாக அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.











