செய்திகள் :

மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய்

post image

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்தைகளுடன் யாரும் இல்லை என்பது பஸ் நடத்துனருக்குத் தெரிய வந்தது.

உடனே அவர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு குழந்தைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அக்குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்களால் எதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை.

அவர்களின் சட்டை பையைச் சோதித்து பார்த்தபோது அதில் ஒரு பேப்பர் இருந்தது. அந்தப் பேப்பரில், இந்தக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை என்று எழுதி அதில் ஒரு போன் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தப் போன் நம்பருக்கு போன் செய்து அந்த நம்பருக்குச் சொந்தக்காரரை போலீஸார் வரவழைத்தனர். அவர் வந்தபோது அவரிடம் விசாரித்ததில் அக்குழந்தைகள் அவரின் மகள் குழந்தைகள் என்று தெரிய வந்தது.

குழந்தைகளின் சட்டை பையில் இருந்த பேப்பர்
குழந்தைகளின் சட்டை பையில் இருந்த பேப்பர்

அக்குழந்தைகளை பஸ்சில் இருக்கும்படி சொல்லிவிட்டு தனது காதலனுடன் அக்குழந்தைகளின் தாய் போனது விசாரணையில் தெரிய வந்தது. அவர் போவதற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று அங்கு வீட்டில் இருந்த பணத்தைத் திருடிக்கொண்டு தனது தந்தையின் ஸ்கூட்டரையும் திருடிச்சென்றுவிட்டார்.

அப்பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. அதுவும் அந்த நபர் குழந்தைகளைப்பற்றி கவலைப்படாமல் திருடிச்சென்ற தனது ஸ்கூட்டர் பற்றி அதிக கவலைப்பட்டார். அதோடு அக்குழந்தைகளைத் தன்னுடன் அழைத்து செல்லவும் ஆர்வம் காட்டவில்லை.

போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் அரசு சிறார் விடுதியில் போலீஸார் சேர்த்தனர். அதோடு அப்பெண் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

டீசல் பற்றாக்குறை; உழவுக்கு டிராக்டருக்கு பதில் பாரம்பர்ய மாடுகளுக்குத் திரும்பும் மகா., விவசாயிகள்

மகாராஷ்டிராவில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோ... மேலும் பார்க்க

இத்தாலியில் மெலோனிக்கு மோடி பரிசளித்த Melody சாக்லேட்... ஏன் இந்தியா முழுக்க ‘Out of Stock’?

இத்தாலி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான பார்லே (Parle) நிறுவனத்தின் 'மெலோடி' (Melody) சாக்லேட்டைப் பரிசளித்தார். இந்த வீடியோவை மெலோனி ... மேலும் பார்க்க

`மனைவி வீட்டு வேலைக்காரி கிடையாது; சமைக்காமல் இருப்பது கொடூரம் ஆகாது' - மும்பை உயர் நீதிமன்றம்

மும்பையை சேர்ந்த கணக்கு தனிக்கையாளர் தனது மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாக கூறி குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். அதோடு அப்பெண்ணிற்கு பராமரிப்பு செலவுக்கான தொ... மேலும் பார்க்க

`வெளிநாடுகளில் நாட்டின் கவுரவத்தை பிரதமர் உயர்த்துகிறார்!' - புகழும் சரத் பவார்

பொதுமக்கள் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தவேண்டும், எரிபொருளை சேமிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அறிவு... மேலும் பார்க்க

Gen Z’s Cockroach Janata Party: இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

இந்திய சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற புதிய நையாண்டி இயக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு நாட்களில் 40,000 உறுப்பினர்களை ஈர்த்த இந்த அமைப... மேலும் பார்க்க

உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவ... மேலும் பார்க்க