செய்திகள் :

Drishyam 3: "என் சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் 'த்ரிஷ்யம்' படம் மாற்றியது"- எஸ்தர் அனில் நெகிழ்ச்சி

post image

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகமான 'த்ரிஷ்யம் 3' திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் மூன்று பாகங்களிலும் ஜார்ஜ்குட்டியின் மகளாக நடித்திருப்பார் நடிகை எஸ்தர் அனில்.

Drishyam 3
Drishyam 3

தமிழில் 'பாபநாசம்' என ரீமேக் செய்யப்பட்டபோது, எஸ்தர் அனிலே தமிழிலும் நடித்தார்.

'த்ரிஷ்யம் 3' நேற்று வெளியாகியிருக்கும் சூழலில் இப்படத் தொடர் அவருக்கு எத்தனை நெருக்கமானது என்பது பற்றி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர், "நான் 2010-ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக என் திரைப்பயணத்தைத் தொடங்கினேன். ஆங்காங்கே சில படங்களில் நடித்து, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு என் வாழ்க்கை மாறியது. ஆம், அப்போதுதான் 'த்ரிஷ்யம்' திரைப்படம் வெளியானது.

அந்தத் திரைப்படம் எல்லாவற்றையுமே மாற்றியமைத்தது. இந்திய அளவில் இருக்கும் ஒட்டுமொத்த சினிமா பார்வையாளர்களிடமும் என்னை அது கொண்டுபோய்ச் சேர்த்தது.

நான் என் கனவிலும் நினைத்துப் பார்க்காத கதவுகளை எனக்காக அது திறந்து வைத்தது. சொல்லப்போனால், சினிமாவில் என்னுடைய பயணத்தை மாற்றியதை விடவும், என்னுடைய சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் அப்படம் மாற்றியமைத்தது. இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு 'த்ரிஷ்யம் 3' வந்திருக்கிறது.

எஸ்தர் அனில் - த்ரிஷ்யம்
எஸ்தர் அனில் - த்ரிஷ்யம்

இந்தத் தருணத்தில் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு, ஆர்வம், வாழ்த்துகள், ஒரு சிறிய பதற்றம் என எல்லாம் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன்.

ஆனால், இவை அனைத்தையும் விட இப்போது என் மனதில் நன்றியுணர்வு மட்டும்தான் அதிகமாக நிறைந்திருக்கிறது. ஜீத்து ஜோசப் அங்கிளை நாங்கள் சந்தித்த அந்த மறக்க முடியாத இரவுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அவர்தான் லால் அங்கிள் மகளாக நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று என்னை நம்பித் தேர்ந்தெடுத்தார். என்னுடைய இந்தப் பாதையை வடிவமைத்த அந்த அதிர்ஷ்டத்திற்கும், சரியான நேரத்திற்கும் மற்றும் பல மனிதர்கள் எடுத்த நல்ல முடிவுகளுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

த்ரிஷ்யம் 3: "ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!"- மோகன்லால் நெகிழ்ச்சி

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார். தமிழ், இ... மேலும் பார்க்க

Drishyam 3 Review: ஓவர்டோஸா, சுவாரஸ்ய த்ரில்லரா? மீண்டும் வெல்கிறதா மோகன்லால் - ஜீத்து ஜோசப் காம்போ?

வருண் பிரபாகரன் (ரோஷன் பஷீர்) காணாமல் போன வழக்கில், ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வருணின் தாய் கீதா பிரபாகரன் (ஆஷா ஷரத்) மற்றும் போலீஸார் குற்றச்சாட்டு வைக்க, அவற்றுக்குப... மேலும் பார்க்க

Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் சஞ்சு சாம்சன் கலகல

இன்று (17.05.2026) சென்னையில் நடைபெற்ற ‘அதிரடி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட், சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இரட்டை விருந்தாக அமைந்தது. அருண் அனிருத்தன் இயக்கத்தில், டோவினோ தாமஸ், ப... மேலும் பார்க்க

"முட்டாள்தனமான 3 திருமணங்கள்; 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன்" - நடிகை மீரா வாசுதேவன் வருத்தம்!

நடிகை மீரா வாசுதேவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். பிரபல மலையாள நடிகையான மீரா வாசுதேவன் 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான... மேலும் பார்க்க

Nazriya Nazim: ``இருளின் நடுவே ஒளிரும் அழகே..."- நஸ்ரியா நசீம் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்! |Photo Album

Preethi Asrani: ``நதியில் நடக்கும் நிலவின் நகலே..."- ப்ரீத்தி அஸ்ரானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்|Photo Album மேலும் பார்க்க

'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரத்துடன் கைகோர்த்த டொவினோ, சூர்யா பட இயக்குநர் - 'பாலன் த பாய்' அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம். அடுத்து புதுமுகங்கள் நடிப்பில் 'பாலன் த பாய்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சர்வதேச அளவில் இப்படத்திற்கு கவனம் கி... மேலும் பார்க்க