செய்திகள் :

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! - ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

post image

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த வேதியியல் ஆசிரியர் சிவ்ராஜ் மொடெகாவ்கர் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

வேதியியல் ஆசிரியரான சிவ்ராஜ் மகாராஷ்டிரா முழுவதும் ஆர்.சி.சி - ரேணுகாய் என்ற பெயரில் கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். மகாராஷ்டிரா கோச்சிங் கிளாஸ்கள் மட்டத்தில் "M Sir" என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவ்ராஜ் ஆரம்பத்தில் லாத்தூர் அருகில் இருக்கும் தனது கிராமத்தில் விவசாயம்தான் செய்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு அங்குள்ள கோச்சிங் சென்டரில் பயிற்சியாளராக சேர்ந்தார். அவர் படிப்படியாக அங்குள்ள அனைத்து கோச்சிங் சென்டர்களுக்கும் கிளாஸ் எடுத்து வந்த நிலையில் 1990களின் இறுதியில் 10 மாணவர்களோடு ஒரு வாடகை அறையில் கோச்சிங் கிளாஸ் ஒன்றை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் வேதியியல் வினாக்களை தனது கைப்பட எழுதி மாணவர்களிடம் கொடுத்து படிக்க சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் படிப்படியாக அவரது கோச்சிங் சென்டர் வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் லாத்தூர் மாடல் என்ற ஒன்றை சிவ்ராஜ் உருவாக்கினார். அனைத்து வகையான அரசு தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார். அதோடு தனது கிளைகளை மகாராஷ்டிரா முழுவதும் விரிவுபடுத்தினார். இன்று, ஆர்.சி.சி கோச்சிங் சென்டர் ஆனது லத்தூர், புனே, நாசிக், சத்ரபதி சம்பாஜிநகர், நாண்டெட், சோலாப்பூர் மற்றும் கோலாப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பல கிளைகளுடன் இயக்கி வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 40,000 மாணவர்கள் இதில் சேர்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வேதியியல் பாடத்தை எளிமையாக சிவ்ராஜ் கற்றுக்கொடுத்து மாணவர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கினார்.

இப்போது ஆர்.சி.சி சென்டர் ​​டிஜிட்டல் கற்றல், மாநில அளவிலான தேர்வுத் தொடர்கள், வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் செயலி சார்ந்த கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தியது. தற்போது சிவ்ராஜ் கோச்சிங் சென்டர் மதிப்பு ரூ.1500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேதியியலில் எம்.எஸ்.சியில் தங்கப் பதக்கம் வென்றவரான மோட்டேகான்கர், ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வியாளராகக் கருதப்படுகிறார்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குல்கர்னி கடந்த காலத்தில் ஆர்.சி.சி-யில் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையிலான தொழில்முறைத் தொடர்பு மற்றும் வினாத்தாள் கசிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

நீட் தேர்வில் கசிந்த வினாத்தாள் ஆசிரியர் சிவ்ராஜ் மொபைல் போனில் இருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சிவ்ராஜ் தனது பயிற்சி மையத்தில் வைத்து, தான் மாணவர்களுக்கு வழங்கிய கேள்விகளே இறுதி வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததாகக் கூறுவது போன்ற ஒரு காணொளியும் கைப்பற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் NEET 2025 தேர்வில், இவரின் ஆர்.சி.சி பயிற்சி மையத்தில் படித்த 19 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் லாத்தூர் அருகில் 8 ஏக்கரில் சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி அடங்கிய கல்வி வளாகம் ஒன்றையும் கட்டி வருகிறார். இதற்கு தேவையான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும... மேலும் பார்க்க

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!

ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்ப... மேலும் பார்க்க

நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! - என்ன நடந்தது?

ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை சிறுவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பிச... மேலும் பார்க்க

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க