செய்திகள் :

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இவர்களின் 15 வயது மகள் மாதவி, வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்று பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இன்று காலை, தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவி மாதவி, சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாததால், மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், வீட்டின் கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

மாணவி உடல்

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினர் கதவை உடைத்து, மாணவியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி மாதவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்வு தோல்வியை மறுதேர்வு மூலமாக எழுதி சரிசெய்துவிடலாம். எனவே, எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது. மனச்சுமைகளை பகிர்ந்துகொள்ள, புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த முயல வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!

தற்கொலைத் தடுப்பு மையம்

நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! - என்ன நடந்தது?

ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை சிறுவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பிச... மேலும் பார்க்க

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ப... மேலும் பார்க்க

`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் கா... மேலும் பார்க்க

தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். இவரும், பக்க... மேலும் பார்க்க