`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்' - புன்னகையால் வறுமையை வெல்லும் சம்...
தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!
தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகளும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகளின் வார்டுகளில் எலிகள் சுற்றித் திரிவதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நோயாளிகளின் படுக்கையில் சர்வ சாதாரணமாக எலிகள் சுற்றித் திரிந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிட்டுச் செல்வதால், நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கின்றனர்.
உள் நோயாளிகள் தங்கும் வார்டு பகுதியில் போதிய சுகாதாரமின்றி இருப்பதால், இது போன்று எலிகள் தொல்லை இருப்பதாகவும், இரவிலும் எலிகளின் கூச்சல் சத்தத்தால் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை எடுக்கும் நோயாளி ஒருவர் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ கட்சியினை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

















