செய்திகள் :

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? - மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

post image

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ திடத்தில் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது. இந்நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கடந்த திங்கள் கிழமையன்று கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்தும் அதில் இணைய மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் பற்றியும் அதிகாரிகள் விரிவாக விளக்கியிருக்கின்றனர்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசிலிருந்து வரவேண்டிய நிதி தடைப்பட்டிருப்பதைப் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்கள் குறித்தும் தெளிவாக விளக்கியிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர் விஜய், 'மாநில உரிமைகள் மற்றும் நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் எதிலும் சறுக்காமல், எது சரியோ அதை செய்யுங்கள்' என மத்திய அரசு முன்வைக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் பேசியிருக்கிறார்.

முதல்வரின் எண்ணவோட்டத்தை அறிந்துகொண்டதால்தான் கூட்டத்தை விட்டு வந்த அமைச்சர் ராஜ் மோகனும் 'நாங்கள் யாருக்கும் அடிபணியமாட்டோம். இருமொழிக் கொள்கைதான் எங்களின் அடிப்படை' என வெளிப்படையாக பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் அதேவேளையில் துறைக்கு வந்து சேர வேண்டிய நிதியை லாவகமாக காய்களை நகர்த்தி வாங்கவும் திட்டமிடுமாறு கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மீதான மாற்றுக்கருத்தையும் மாநிலத்துக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை பற்றியும் முதல்வர் வலியுறுத்துவார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.!

`விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்; அமைச்சரவையில்..!' - திருமாவளவன் சொன்ன பதில்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கும் முக்கியமான ஒன்று. தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் சி... மேலும் பார்க்க

`MRP விலைக்கு விற்க தயார்; கடை நிர்வாக செலவுகளை முழுமையாக அரசு ஏற்குமா?' - டாஸ்மாக் பணியாளர்கள்

தமிழகத்தில் தவெக ஆட்சி பதவியேற்றதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில், பள்ளிகள் போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிட்டது.இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள... மேலும் பார்க்க

'நமது அம்மா' நாளிதழைக் கைப்பற்றிய வேலுமணி; போட்டிக்கு பழனிசாமி தொடங்கிய புதிய நாளிதழ் 'போர்வாள்'!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா'. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின் ஒரு அணியான சி.வி.சண்முகம் & டீமின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அதனால், 'நிறுவனர் - எடப்பாடி பழனிசாமி' என்று அந்த நாளித... மேலும் பார்க்க

ஓமன்: 'தீ விபத்தில் பாஸ்போர்ட், விசா எரிந்துவிட்டது' - இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எம்.ஜி.ஆர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஹசர்நிஷா(44). இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு‌ மகனும் இருக்கின்றனர். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிர... மேலும் பார்க்க