செய்திகள் :

`MRP விலைக்கு விற்க தயார்; கடை நிர்வாக செலவுகளை முழுமையாக அரசு ஏற்குமா?' - டாஸ்மாக் பணியாளர்கள்

post image

தமிழகத்தில் தவெக ஆட்சி பதவியேற்றதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில், பள்ளிகள் போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள், மேலாளர்கள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் அனைத்து விதமான மதுபானங்களும் எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படும். மது பிரியர்கள் கடைகள் முன்பு வரிசையாக நின்று சரியான சில்லறையை கொடுத்து மது வகைகளை வாங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வாங்கிய மது வகைகளுக்கு சரியான பில் வாங்கிக் கொள்ளவும் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள வழி காட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனரை டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களது கடைகளில் ஒட்டி வைத்தனர்.

இது தொடர்பாக, அனைத்து டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டு குழு நிர்வாகி தமிழ்ச்செல்வனிடம் பேசுகையில்,

"நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் மாவட்டம் முழுதும் 10 கடைகள் மூடப்பட்டுள்ளது. இது போல தமிழகத்தில் 710 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், ``மதுபான பாட்டில்களை எம்ஆர்பி விலைக்கு விற்க நாங்க தயார் !.. டாஸ்மாக் கடைகளில் மாசம், மாசம் நடக்கும் நிர்வாக செலவுகளை முழுமையாக ஏற்க அரசு தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

``பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க கூடாது என்பதை ஏற்கிறோம். வரவேற்கிறோம். நேர்மையான முதல்வர் நேர்மையான ஆட்சியில் நாங்களும் இனி நேர்மையாக இருக்கிறோம். ஆனால், அரசு செய்ய வேண்டிய வேலை மற்றும் செலவுகள் எங்கள் தலையில் போடப்பட்டது.

ஒவ்வொரு கடையிலும் அதன் நிர்வாக செலவுகளை இதுவரை நாங்கள் செய்து வருகிறோம். அதாவது, டாஸ்மாக் கட்டத்தின் வாடகை பாதி நாங்கள் தருகிறோம். மின்கட்டணத்தில் பாதி நாங்க கட்டுகிறோம், வாரத்தில் 2 முறை வரும் சரக்கு லோடு இறக்கும் கூலி 4000 முதல் 5000 வரை நாங்கள் தான் கொடுக்கிறோம்.

இவை அல்லாமல் உயர் அதிகாரி பார்வையிடும் போது என பல்வேறு பார்மாலிட்டிஸ் செலவுகளை இனி அரசே செய்து கொடுக்கட்டும். இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கு வதை நிறுத்திக் கொள்கிறோம்" என்றார்.

மேலும், ``டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் களையும் அட்டைப் பெட்டிகளை வைக்கவும் போதிய இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார்.

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? - மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ திடத்தில் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது... மேலும் பார்க்க

'நமது அம்மா' நாளிதழைக் கைப்பற்றிய வேலுமணி; போட்டிக்கு பழனிசாமி தொடங்கிய புதிய நாளிதழ் 'போர்வாள்'!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா'. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின் ஒரு அணியான சி.வி.சண்முகம் & டீமின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அதனால், 'நிறுவனர் - எடப்பாடி பழனிசாமி' என்று அந்த நாளித... மேலும் பார்க்க

ஓமன்: 'தீ விபத்தில் பாஸ்போர்ட், விசா எரிந்துவிட்டது' - இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எம்.ஜி.ஆர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஹசர்நிஷா(44). இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு‌ மகனும் இருக்கின்றனர். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிர... மேலும் பார்க்க

'அதிமுக நல்லா இருக்கணும்; விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!' - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விருப்பம்

அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தார் முதல்வர் விஜய். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விசிகவை அமைச்சரவையில் இடம்... மேலும் பார்க்க

'இந்தியப் பத்திரிகை சுதந்திரம்?' Helle Lyng கேள்வி; மோடி 'நோ' பதில்; சுழற்றியடிக்கும் நார்வே பயணம்

இந்தியப் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார்.கடந்த திங்கட்கிழமை (மே 18), நார்வேயின் தலைநகரான ஒஸ்... மேலும் பார்க்க