Gold: 'சின்ன Relief' தங்கம் விலை 'இவ்வளவு' மாதங்களுக்கு உயராது! என்ன காரணம் தெரி...
பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?
பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தர் கவுர் என்ற அப்பெண் பாடகி கடந்த 13ம் தேதி லூதியானாவில் உள்ள தனது வீட்டில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவதற்காக இரவு 8 மணிக்குத் தனது காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.
குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் சுக்விந்தர் சிங் என்பவர்தான் இந்தர் கவுரைக் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இந்தர் கவுர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள கால்வாய் ஒன்றில் போடப்பட்டு இருந்தார்.

அவரது உடலை போலீஸார் மீட்டுள்ளனர். அவரது உடலை அவரது பெற்றோரும் அடையாளம் காட்டியுள்ளனர். இது குறித்து சுக்விந்தர் சிங் மற்றும் அவனது கூட்டாளி கரம்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீஸார் குற்றவாளியைப் பிடிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து இந்தர் கவுர் சகோதரர் ஜோதிந்தர் சிங் கூறுகையில், ''சுக்விந்தர் எனது சகோதரியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அக்கோரிக்கையை எனது சகோதரி நிராகரித்துவிட்டார். எனவே சுக்விந்தர் சிங் எனது சகோதரியைக் கொலை செய்வதற்காக கனடாவில் இருந்து பஞ்சாப் வந்து துப்பாக்கி முனையில் எனது சகோதரியைக் கடத்தி சென்று கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு மீண்டும் கனடாவிற்குச் சென்றுவிட்டான்'' என்று குறிப்பிட்டார்.

















